தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் அனிமேட்ரானிக்ஸ் படம் ‘கபி’

26 Apr 2021

100க்கும் அதிகமான திரைப்படங்களைத் தயாரித்துள்ள ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்து தயாரித்து வரும் படம் ‘கபி’.

நிஜ விலங்குகளை வைத்து பல்வேறு வெற்றிப் படங்களையத் தயாரித்துள்ள தேனாண்டாள் பிலிம்ஸ், இந்திய திரை உலக வரலாற்றில் முதன்முறையாக அனிமேட்ரானிக்ஸ் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்ப முறையில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட ராட்சச குரங்கை வைத்து தயாரிக்கும் படம் இது.

நேற்று வெளியான இதன் முதல் பார்வை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

கோகுல்ராஜ் பாஸ்கர் திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். என்.ராமசாமி மற்றும் கவுசிக் கரா இருவரும் இப்படத்திற்கு கதை எழுதி உள்ளனர்.

இப் படத்திற்காக நூற்றுக்கும் அதிகமான கணிணி வல்லுனர்கள் பணியாற்றி வருகின்றனர்.

திரைப்படத் தயாரிப்பாளரும் வினியோகஸ்தருமான லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் இப்படத்தின் தயாரிப்பில் கூட்டு சேர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது

Tags: kapi

Share via: