சுந்தர் சி நாயகனாக நடிக்கும் ‘ஒன் 2 ஒன்’
14 Jan 2022
24 HRS புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் K.திருஞானம் எழுதி இயக்கும் புதிய படம் ‘ஒன் 2 ஒன்’.
இப்படத்தில் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்க, விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
திரிஷா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ‘பரமபதம் விளையாட்டு’ படத்தைத் தொடர்ந்து கே திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் இது.
இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த நடிகர் பற்றிய விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
விக்ரம் மோகன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.
இன்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இம்மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
Tags: one 2 one, sundar c, k thirugnanam, sidharth vipin