கருணாஸ் நடிக்கும் ‘ஆதார்’ முதல் பார்வை வெளியீடு

14 Jan 2022

கருணாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஆதார்' படத்தின் முதல் பார்வை,  இன்று பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. 

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இதை வெளியிட்டார்.

'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஆதார்'. 

கருணாஸ், அருண்பாண்டியன், 'காலா' புகழ் திலீபன், 'பாகுபலி' புகழ் பிரபாகர், நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான்  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். பாடல்களை கவிஞர் யுரேகா எழுத, 'அசுரன்' புகழ் ராமர் படத்தைத் தொகுத்திருக்கிறார். தேசிய விருது பெற்ற கலை இயக்குநரான சீனு படத்தின் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். 

'ஆதார்' படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,  ''எளிய மனிதர்களின் வலியை பேசும் யதார்த்த சினிமாவாக ‘ஆதார்’ உருவாகியிருக்கிறது,” என்றார்.

Tags: aadhar, karunas, ps ramnath, rithvika

Share via: