‘கோச்சடையான்’ கண்டிப்பாக மே 9ம் தேதி ரிலீஸ்...

10 Apr 2014
kochadaiiyaan 1004ஏப்ரல் மாதம் என்றாலே ஏமாற்றும் மாதம் என சொல்வார்கள். அந்த விதத்தில் ‘கோச்சடையான்’ ரிலீஸ் தேதி பற்றி ரஜினி ரசிகர்கள் கடந்த சில நாட்களாக நிறையவே ஏமாந்து விட்டார்கள். நாமும், இதுவரை ‘கோச்சடையான்’ அந்த தேதியில் ரிலீஸ், இந்த தேதியில் ரிலீஸ் என பல செய்திகளை வெளியிட்டுள்ளோம். முடிந்தவரை ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அது இருக்கட்டுமே என்ற நோக்கத்தில் மட்டுமே அப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டோம். இப்போது கடைசியாக ‘கோச்சடையான்’ படத்தின் மக்கள் தொடர்பாளர் மூலம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. “கோச்சடையான்’ திரைப்படம் மே மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது. வெளியீட்டுத் தேதியுடன் கூடிய பற்றி பத்திரிகை விளம்பரம் வரும் சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை  வெளியாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக படம் மே 1ம் தேதியன்று வெளியாகும் என பல மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதனிடையே படத்தின் இறுதிக் கட்டப் பணிகளை முடிப்பதற்காக படத்தின் இயக்குனரான சௌந்தர்யா சீனா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘கோச்சடையான்’ வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், கோடை விடுமுறைக்கு வருவதாக இருந்த  மற்ற படங்களின் வெளியீடு மேலும் சில வாரங்கள் தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது.

Share via: