‘பாகுபலி 2’ வியக்க வைத்த அடுத்த போஸ்டர்

26 Feb 2017
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் ‘பாகுபலி 2’ படம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. சில தினங்களுக்கு முன் மகா சிவராத்திரி முதல் இப்படத்தின் பிரமோஷன் வேலைகளை படக்குழுவினர் ஆரம்பித்துவிட்டார்கள். அன்றைய தினம் பிரபாஸின் அசத்தலான ‘பாகுபலி’ கதாபாத்திர போஸ்டர் ஒன்றையும், மோஷன் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டார்கள். யானை தும்பிக்கை மீது கம்பீரமாக பிரபாஸ் நிற்கும் அந்த போஸ்டர் ரசிகர்களிடம் வழக்கம் போல வரவேற்பைப் பெற்றுள்ளது. மோஷன் போஸ்டரை யு டியூபில் 24 மணி நேரத்திற்குள்ளாகவே 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். தற்போது வரை 27 லட்சம் பேர் பார்த்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய  மொழிகளில் வெளியாக உள்ள ‘பாகுபலி 2’ படத்தின் டிரைலரை விரைவில் வெளியிடும் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருவதாக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

Share via: