பெரும் வரவேற்பில் ‘விக்ரம் வேதா’ டீசர்

26 Feb 2017
‘ஓரம் போ, வ’ ஆகிய படங்களை இயக்கிய புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் சாம்.சி.எஸ் இசையமைப்பில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலட்சுமி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் ‘விக்ரம் வேதா’ படத்தின் டீசர் 23 பிப்ரவரி, 2017 அன்று யு டியூபில் வெளியிடப்பட்டது. டீசர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே 10 லட்சம் பேர் டீசரைப் பார்த்துள்ளனர். ‘இறுதிச் சுற்று’ படத்திற்குப் பிறகு மாதவன் நாயகனாக நடித்து வெளிவர இருக்கும் படம் இது. விஜய் சேதுபதி எதிர் நாயகனாக நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகிகளாக நடிக்கிறார்கள். ‘கிருமி’ படத்தில் நடித்த கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மாதவன் - விஜய் சேதுபதி முதன் முறையாக இணையும் இந்தப் படத்தின் டீசருக்குக் கிடைத்துள்ள வரவேற்பு படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

Share via: