லைகா நிறுவனத்தின் புதிய முடிவு

02 Mar 2024

தங்களுடைய படத் தயாரிப்பில் புதிய முடிவொன்றை எடுத்திருக்கிறது லைகா நிறுவனம்.

ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’, கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’, அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் நிறுவனம் லைகா. 

இந்தப் படங்கள் மட்டுமன்றி விஜய் மகன் இயக்கவுள்ள படம் என பல்வேறு படங்களைத் தொடர்ச்சியாக தயாரிக்கவுள்ளது.

குறைந்த மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களையும் இந்நிறுவனம் தயாரித்து வந்தது. தற்போது இந்தப் படங்களை தயாரிக்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளது லைகா நிறுவனம். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தப் படங்களை தயாரிப்பதன் மூலம் குறைந்த அளவே லாபம் வருவதாகவும், நஷ்டம் வந்தால் முழுமையாக வருவதாகவும் கூறி இருக்கிறது. 

இதனால் சில இயக்குநர்களுக்கு அளித்த முன்பணம் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. மேலும், தொடர்ச்சியாக 30 முதல் 40 கோடிக்கு அதிகமான பட்ஜெட் படங்களை மட்டுமே தயாரிப்பது என்று முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் இந்நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் நடித்த ‘லால் சலாம்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் சுமார் 22 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ‘லால் சலாம்’ படத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமம் விற்பனையானால் தப்பிக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், வாங்கத் தான் ஆளில்லை.

Tags: lyca, lal salaam, indian 2

Share via: