‘நக்கலைட்ஸ்’ அணி இயக்கத்தில் மணிகண்டன்.
25 May 2024
பிரபல ‘நக்கலைட்ஸ்’ அணி இயக்கவுள்ள படத்தில் நடிக்க மணிகண்டன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் பின்னணியில் செயல்பட்டு வரும் பிரபல யூடியூப் அணி ‘நக்கலைட்ஸ்’. இந்த அணியின் வீடியோக்கள் மிகவும் பிரபலம். இதில் நடித்த பலரும் திரைத்துறையில் சில படங்களில் நடித்து வருகிறார்கள். அதனால் ‘நக்கலைட்ஸ்’ அணி என்பது திரைத்துறையினருக்கு ஒன்றும் புதிது அல்ல.
இப்போது ‘நக்கலைட்ஸ்’ அணி படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார்கள். இதன் கதையினை கேட்டுவிட்டு நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் மணிகண்டன். முழுக்க காமெடி பின்னணியில் வலுவான கதையொன்றை உருவாக்கியுள்ளது ‘நக்கலைட்ஸ்’ அணி.
இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஜுன் மாதத்தில் வெளியாகும் என தெரிகிறது.
Tags: nakkalites, manikandan