மீண்டும் இணையும் சிரஞ்சீவி – மோகன் ராஜா கூட்டணி
25 May 2024
‘தி காட்ஃபாதர்’ படத்தினைத் தொடர்ந்து மீண்டும் சிரஞ்சீவி – மோகன் ராஜா கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது.
மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான படம் ‘தி காட்ஃபாதர்’. மலையாளத்தில் பெரும் வரவேற்பினைப் பெற்ற ‘லூசிபர்’ படத்தின் ரீமேக் இது. தெலுங்கு ரீமேக் எதிர்பார்த்த வரவேற்பினைப் பெறவில்லை என்றாலும், போட்ட முதலீட்டிற்கு மோசமில்லை என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்திருந்தார்கள்.
தற்போது மீண்டும் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால் ‘கோட்’ படத்தின் வெளியீட்டிற்கு பின்பே ‘தனி ஒருவன் 2’ படத்தின் முதற்கட்ட பணிகளை துவங்கவுள்ளதாம் ஏஜிஎஸ் நிறுவனம். இதனால் இந்த இடைவெளியில் சிரஞ்சீவி படத்தினை முடிக்க முடிவு செய்துள்ளார் மோகன் ராஜா.
சிரஞ்சீவி படத்தின் கதையினை பி.வி.எஸ் ரவி எழுதியிருக்கிறார். இதன் முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விரைவில் சிரஞ்சீவி – மோகன் ராஜா கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
Tags: chiranjeevi, mohan raja