கார்த்திக் சுப்புராஜின் வேகம்: சூர்யா சந்தோஷம்

25 May 2024

கார்த்திக் சுப்புராஜின் பணிகள் வேகத்தினைப் பார்த்து சூர்யா மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

‘கங்குவா’ படத்தினை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இதற்காக ஜுன் முதல் வாரத்தில் தொடர்ச்சியாக 47 நாட்கள் தேதிகள் கொடுத்துள்ளார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் தீவு பகுதியில் தொடங்குகிறது.

இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சில நாட்களே முதற்கட்டப் பணிகளுக்குஇருந்தாலும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சரியாக திட்டமிட்டு பணிகளை செய்து வருகிறார். இவருடைய இந்த திட்டமிடலைப் பார்த்து சூர்யா மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்.

இந்தப் படம் திட்டமிட்டவாறு முடிந்தவிடும் என்ற நம்பிக்கை சூர்யாவுக்கு வந்திருக்கிறது. ஏனென்றால் அந்தமான் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஊட்டி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இதன் படப்பிடிப்புக்காக 2 பாடல்களையும் சந்தோஷ் நாராயணனிடம் இருந்து வாங்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

கார்த்திக் சுப்புராஜ் படத்தினை முடித்துவிட்டு, இந்தியில் ‘கர்ணா’ படத்தின் பணிகளை துவங்க முடிவு செய்துள்ளார் சூர்யா. இதற்காக கார்த்திக் சுப்புராஜ் படத்தினை 3 கட்ட படப்பிடிப்பில் முடிக்க திட்டமிடுமாறு கூறியிருக்கிறார்.

Tags: karthik subburaj, suriya

Share via: