நானும் சிங்கிள்தான் - இதுவரை சொல்லாத கதை
05 Feb 2021
த்ரி இஸ் எ கம்பெனி புரொடக்ஷன் சார்பாக புன்னகைப் பூ கீதா தயாரிப்பில், கோபி இயக்கத்தில் தினேஷ், தீப்தி, மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, ரமா, ஆதித்யா, கதிர், செல்வா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நானும் சிங்கிள்தான்’.
படம் பற்றி இயக்குனர் கோபி கூறுகையில்,
“ஆண்கள் மேல் நம்பிக்கையே இல்லாமல் தன்னால் சிங்கிளாவே வாழ்க்கை முழுவதும் வாழமுடியும் என நினைக்கும் பெண்ணுக்கும், கனவிலும் காதல் கை கூடாமல் சிங்கிளாவே இருக்கும் இளைஞனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் இந்த படம்.
இவர்களுக்கு எப்படி மொட்ட ராஜேந்திரன் ‘க்யூப்பிட்’ ஆக மாறி காதலுக்கு உதவுகிறார், ஹீரோ தன் புத்திசாலித்தனத்தால் காதலில் வெற்றி பெறுகிறாரா, பிடிவாதமாக இருக்கும் ஹீரோயின் மனதை மாற்றுகிறாரா, இல்லையா, அல்லது இவர் மனம் மாறுகிறாரா என்பது தான் கதை.
என்ன தான் நாங்கள் முழுக் கதையையும் கூறினாலும் இது ஒரு கதைதான். இதுவரை சொல்லாத இன்னொரு கதையும் படத்தில் இருக்கிறது அது படம் பார்த்தால் தான் தெரியும்,” என்கிறார் இயக்குனர்.
இப்படம் இம்மாதம் 12 ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
Tags: dinesh, naanum singlethan, gopi, deepthi