‘மாஸ்டர்’ படத்தை இணைந்து தயாரித்து வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, வாணி போஜன், சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் விக்ரமின் 60வது படத்திற்கு ‘மகான்’ என்ற பெயரை வைத்திருக்கிறார்கள்.

அதற்கான அறிவிப்பு, இன்று மாலை முதல் பார்வையுடன் வெளியானது.

விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் இந்தப் படத்தில் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். ‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான துருவ், தனது இரண்டாவது படத்திலேயே அப்பா விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார்.

‘மகான்’ படப்பிடிப்பு சில தினங்களக்கு முன்புதான் முடிந்தது.

படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன.

விரைவில் படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.