நடிகர்களுக்கு ‘மாவீரன்’ தயாரிப்பாளர் வேண்டுகோள்

03 Mar 2024

முன்னணி நடிகர்களுக்கு ‘மாவீரன்’ படத்தின் தயாரிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மலையாள படமான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ கொண்டாடப்பட்டு வருகிறது. 

தமிழகம் முழுக்க தமிழ் படங்களுக்கு நிகராக பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டு உள்ளன. மேலும், கடைசி 2 நாட்களில் கேரளா வசூலை விட தமிழகத்தில் வசூல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

’மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு கமல், தனுஷ், விக்ரம், சித்தார்த், தயாரிப்பாளர் அன்புச்செழியன் உள்ளிட்ட பலரும் படக்குழுவினரை நேரில் பாராட்டி இருக்கிறார்கள். மேலும், எக்ஸ் தளம் மூலமாக முன்னணி தமிழ் இயக்குநர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

தற்போது ‘மாவீரன்’ படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தனது எக்ஸ் தளத்தில் முன்னணி நடிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் “சினிமாவுக்கு மொழி தேவையில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். 

ஆனால், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் வரும் காலத்தில் தமிழ் சினிமாவின் நல்ல படங்கள் வரும் போதும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்ட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவுடன் குட்நைட், டாடா, யாத்திசை, அயோத்தி, சித்தா, பார்க்கிங், போர் தொழில், ஜோ, இறுகப்பற்று உள்ளிட்ட படங்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த படங்கள் வெளியாகும் போது முன்னணி நடிகர்கள் யாருமே படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: maaveran, arun viswa

Share via: