விஜய்க்கு நோ சொன்ன அனுஷ்கா
03 Mar 2024
விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தில் நடிக்க கேட்டதற்கு அனுஷ்கா முடியாது என்று தெரிவித்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
யுவன் இசையமைத்து வரும் இந்தப் படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
சென்னையில் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மாஸ்கோ நகரில் படப்பிடிப்புக்காக இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, இந்தப் படத்தில் விஜய்க்கு நாயகியாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
அந்தச் சமயத்தில் அனுஷ்காவிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. தொலைபேசி வாயிலாக அழைப்பு வந்தவுடனேயே “இப்போதைக்கு நாயகியாக நடிக்கும் எண்ணமில்லை” என்று கூறிவிட்டார் அனுஷ்கா.
உடல்ரீதியாக ஏற்பட்ட பிரச்சினை இன்னும் முழுமையாக தீரவில்லை என்பதால் இப்படி தெரிவித்தார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தார்கள்.
விஜய் – அனுஷ்கா இருவரும் ‘வேட்டைக்காரன்’ படத்தில் இணைந்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: vijay, goat, anushka

