‘மாநாடு’ படத்தின் இரண்டு போஸ்டர்கள் இன்று வெளியீடு
21 Nov 2020
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, பாரதிராஜா, எஸ்ஏசி, ஒய் ஜி மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே. பாரதி, பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வரும் படம் ‘மாநாடு’.
வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் இது.
இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டது. முதல் போஸ்டர் காலையும், இரண்டாவது போஸ்டர் மாலையும் வெளியிடப்பட்டது.
முதல் போஸ்டரில் அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனான சிம்பு தொழுகை செய்தபடி இருக்க, அவரது நெற்றிப் பொட்டில் துப்பாக்கி குண்டு ஒன்று பாய்ந்து நிற்கிறது.
இரண்டாவது போஸ்டரில் தன்னைச் சுற்றி பல சிம்புக்கள் நின்றிருக்க சிம்பு, தன்னைத் தானே சுட்டுக் கொள்வது போல துப்பாக்கியை பிடித்தபடி நிற்கிறார். ‘எங்கெல்லாம் அநீதி எழுகிறதோ, அங்கு நான் வருவேன் - அப்துல் காலிக்’ என்ற வாசகங்களுடன் சிலம்பரன் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
இரண்டு போஸ்டர்களையும் பார்த்து சர்ச்சைக்குரிய படமாக இருக்குமா என பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
Poster 1 - https://twitter.com/SilambarasanTR_/status/1330017322539560960
Poster 2 - https://twitter.com/SilambarasanTR_/status/1330133922185940992
Tags: maanadu, venkat prabhu, silambarasan, kalyani