ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு ஆசிஷ் வித்யார்த்தி

21 Nov 2020

விக்ரம் நடித்த 'தில்' படத்தின் மூலம்  தமிழில் அறிமுகமானவர் ஆசிஷ் வித்யார்த்தி. அந்தப் படத்தில், தனது வித்தியாசமான வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களிடம் பேசப்பட்டவர்.

அதைத் தொடர்ந்து பிஸியான வில்லன் நடிகராகி  ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.

கடைசியாக 2015ல் தனுஷ் நடித்து வெளிவந்த 'அநேகன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆசிஷ் வித்யார்த்தி, அதையடுத்து கடந்த ஐந்த வருடங்களாக தமிழில் எந்த படங்களிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். 

வாய்ப்புகள் தேடிவந்தாலும் கூட, ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில்  நடிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லையென்பதால் பல படங்களை தவிர்த்துவிட்டார்.

இந்நிலையில் ஐந்து வருடங்கள் கழித்து தற்போது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘எக்கோ’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இந்த 'எக்கோ’வில் இதுவரை நாம் பார்க்காத ஆசிஷ் வித்யார்த்தியைப் பார்க்கலாம் என்கின்றனர் படக்குழுவினர்.

ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். 

‘தில், தூள், கில்லி, தடம்’ உளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 

இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கின்றனர்.

Tags: echo, ashish vidyarthi

Share via: