கார்த்தியின் புதிய படம் ஆரம்பம்

27 May 2026

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில், கல்யாண் சங்கர் இயக்கத்தில், கார்த்தி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை கார்த்தியின் பிறந்தநாளன்று நடைபெற்றது.

‘வாத்தி, லக்கி பாஸ்கர், விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மீண்டும் ஒரு பிரமாண்டமான படைப்பாக இப்படத்தைத் தயாரிக்க உள்ளது.

நகைச்சுவை கலந்த கலகலப்பான படமாக இப்படம் உருவாக உள்ளது. படத்தின் முதல் பார்வை மற்ற விவரங்களை விரைவில் வெளியிட உள்ளார்கள். 

சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ்தான் தயாரித்துள்ளது. அண்ணன் நடித்த நிறுவனத்தில் தற்போது தம்பியும் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

 

Tags: karthi, meenakshi chowdary

Share via: