மாறும் தேதிகள்: ‘கங்குவா’ Vs ’அமரன்’
17 Jul 2024
‘கங்குவா’ மற்றும் ‘அமரன்’ ஆகிய படங்கள் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என தெரிகிறது.
சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், சூர்யா பிறந்த நாளன்று படத்தின் முதல் பாடலை வெளியிட முடிவு செய்திருக்கிறது.
மேலும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லை உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அமரன்’. கமல் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கிறது. இதன் டீஸர் வெளியாகிவிட்டாலும், இன்னும் எப்போது வெளியீடு என்பது முடிவாகவில்லை.
இதனிடையே, ‘அமரன்’ படமும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என தெரிகிறது. இது தொடர்பாக விநியோகஸ்தர்களிடம் பேசப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (ஜூலை 17) வெளியாகும் என தெரிகிறது. இரண்டுமே எதிர்பார்ப்புக்குரிய படங்கள் என்பதால், தொடர் விடுமுறைக்கு வசூலை அள்ளலாம் என விநியோகஸ்தர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.
‘கங்குவா’ மற்றும் ‘அமரன்’ ஆகிய படங்கள் அனைத்து மொழிகளிலும் வெளியாக இருப்பதால், பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
Tags: kanguva, amaran
