பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளரான கே.எஸ். ராமகிருஷ்ணா, ஆர்.கே. இன்டர்நேஷனல் இன்கார்பரேட் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரித்து வரும் திரைப்படம் 'கலியுகம்'. 

ப்ரமோத் சுந்தர் இயக்கி வரும் இப்படத்தில் 'விக்ரம் வேதா, நேர்கொண்டபார்வை' ஆகிய படங்களில் நடித்து பிரபலமான ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் நடிகர் கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்று, தற்போது இரண்டாவது மற்றும் இறுதி கட்ட படப்பிடிப்பு, பிரம்மாண்டமான பட்ஜெட்டில் கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட அதிநவீன அரங்கத்தில் தொடங்கியிருக்கிறது.

போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான திரில்லர் ஜானரில் தயாராகி வரும் படம் 'கலியுகம்'.