2021ம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடியப் போகிறது. இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை இந்த வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31ம் தேதி வருகிறது.

அன்றைய தினம் தங்களது படங்களை எப்படியும் வெளியிட்டுவிட வேண்டும் என பல சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் நினைத்துள்ளனர். அதனால், அன்றைய தினம் மட்டும் 13 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எத்தனை படம் வெளியாகும் என்பது அன்றைக்குத்தான் தெரியும்.

இந்த வருடத்தைப் பொறுத்தவரையில் இதுவரையில் தியேட்டர்களில் 125 படங்கள், ஓடிடி தளங்களில் 40 படங்கள் என வெளிவந்துள்ளது. வரும் வாரம் வெளியாகும் படங்களையும் சேர்த்தால் தியேட்டர்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 135ஐக் கடந்துவிடும்.

இந்த வாரத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள படங்கள்

டிசம்பர் 30

பிளான் பண்ணி பண்ணனும்

டிசம்பர் 31

இபிகோ 302
கரையேறும் கனவுகள்
மதுரை மணிக்குறவன்
மீண்டும்
நீ சுடத்தான் வந்தியா
ஒபாமா உங்களுக்காக
ஓணான்
பொண்ணு மாப்பிள்ளை
சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை
சில்லாட்ட
தண்ணி வண்டி
தீர்ப்புகள் விற்கப்படும்
வேலன்