இம்ரான் கானை காதலித்து வரும் லேகா வாஷிங்டன்
31 Mar 2024
இம்ரான் கானை காதலித்து வருகிறார் லேகா வாஷிங்டன்.
இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஆமிர்கானின் மருமகன் இம்ரான் கான். இவரும் நடிகராக சில படங்களில் நடித்தார். முதலில் நடித்த படங்களுக்குப் பிறகு, சில படங்கள் தொடர் தோல்வியை தழுவியது. இதனால் 2015-ம் ஆண்டிற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் இம்ரான் கான்.
இவர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். தற்போது தமிழ் திரையுலகிற்கு பரிச்சயமான லேகா வாஷிங்டனை காதலித்து வருகிறார் இம்ரான் கான். லேகா வாஷிங்டனும் திருமணமாகி விவகாரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் பார்ட்டி ஒன்றில் அறிமுகமாகி காதலித்து வருகிறார்கள். தற்போது இருவருமே கரண் ஜோஹரின் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக குடியேறி இருக்கிறார்கள் என்று பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Tags: imran khan, aamir khan