பெரும் மகிழ்ச்சியில் அஜித்

30 Apr 2024

‘குட் பேட் அக்லி’ கதையினை கேட்டுவிட்டு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் அஜித்.

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தாமத்தினால், ‘குட் பேட் அக்லி’ படத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் அஜித். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே 10-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

சமீபத்தில் அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் சந்திப்பு சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் இறுதி திரைக்கதை வடிவத்தினை முழுமையாக கூறியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். இதனை கேட்டுவிட்டு ஆதிக்கை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார் அஜித்.

அப்போது, இந்தப் படம் தனது திரையுலக வாழ்வில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும், அனைவரும் திரையரங்கில் கொண்டாடுவது உறுதி என்று சந்தோஷத்தில் கூறியிருக்கிறார் அஜித். இதனைக் கேட்டு தயாரிப்பு நிறுவனம், ஆதிக் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஏனென்றால் இதுவரை வெளியான அஜித் படங்களில், கதையை கேட்டுவிட்டு இந்தளவுக்கு அஜித் பேசியதில்லை என்கிறார்கள்.

 

Tags: ajith, adhik ravichandran, devi sri prasad, good bad ugly

Share via: