விரைவில் இயக்குநர் கெளதம் கார்த்திக்
17 Jun 2024
நடிகர் கெளதம் கார்த்திக் விரைவில் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.
மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கெளதம் கார்த்திக். முன்னணி நடிகரான கார்த்திக் மகன் தான் கெளதம் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கடல்’ படம் படுதோல்வியை தழுவியது.
அதனைத் தொடர்ந்து கெளதம் கார்த்திக் நடித்த படங்கள் எதுவுமே, அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆனாலும், தொடர்ச்சியாக நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
தற்போது நடிப்பைத் தாண்டி இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். இதற்காக தனது நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து கதையொன்றை எழுதி வருகிறார். இந்தாண்டுக்குள் திரைக்கதை எழுதும் பணியையும் முடிக்க உள்ளார்.
அடுத்த ஆண்டு இயக்குநர் கெளதம் கார்த்திக்கை அனைவரும் காணலாம் என தெரிகிறது.
Tags: gautam karthik