அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால்
17 Jun 2024
அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கவுள்ளார்.
’கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகிய படங்களை இயக்கியவர் அருண்ராஜா காமராஜ். இந்தப் படங்களைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பதற்காக கதையொன்ற தயார் செய்து வந்தார். இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், இந்தப் படம் தொடங்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து ’லேபிள்’ என்ற வெப்சீரிஸை இயக்கினார். அது எதிர்பார்த்த வரவேற்பினை பெற்றது. தற்போது மீண்டும் படம் இயக்க முடிவு செய்துள்ளார் அருண்ராஜா காமராஜ். இதில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து, தயாரிக்க முடிவு செய்துள்ளார்.
அருண்ராஜா காமராஜ் பிறந்த நாளை முன்னிட்டு, இதனை விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தற்போது இந்தப் படத்துக்கான திரைக்கதையினை இறுதிச் செய்யும் பணியில் மும்முரமாக இருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.
Tags: arunraja, vishnu vishal