ஈஸ்வரன் - தமிழ்நாடு தியேட்டர்கள் விவரம்
09 Jan 2021
மாதவ் மீடியா, டி கம்பெனி தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஈஸ்வரன்’.
ஜனவரி 14 அன்று பொங்கல் தினத்தில் வெளியாகும் இப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர்கள் விவரம்...வட ஆற்கடு, தென்னாற்காடு ஏரியா தியேட்டர்கள் விவரம் விரைவில் இணைக்கப்படும்..
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்து ஜனவரி 13 அன்று வெளிவரும் ‘மாஸ்டர்’ படத்துடன் பொங்கல் போட்டியில் ‘ஈஸ்வரன்’ படமும் களத்தில் குதிக்கிறது.
மிகவும் குறுகிய காலத்தில் படமாக்கப்பட்ட இப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள படம் என்பதால் பி அன்ட் சி சென்டர்களில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது
சென்னை ஏரியா
செங்கல்பட்டு ஏரியா
சேலம் ஏரியா
திருச்சி, தஞ்சாவூர் ஏரியா
மதுரை, ராமநாதபுரம் ஏரியா
திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியா
Tags: eeswaran, eswaran, easwaran, simbu, silambarasan, suseenthiran, thaman, nidhi agarwal