மிரட்டும் விக்ரமின் ‘கோப்ரா’ டீசர்
09 Jan 2021
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் விக்ரம், ஸ்ரீநதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் கோப்ரா.
இப்படத்தின் டீசர் சற்று முன் யு டியுபில் வெளியிடப்பட்டது. வித்தியாசமான அதிரடி ஆக்ஷனாக இப்படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு டீசரைப் பார்த்ததுமே ஏற்படுகிறது.
விதவிதமான கதாபாத்திரங்களில் விக்ரம் மிரட்டுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் இப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். ‘கேஜிஎப்’ ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி தான் இப்படத்தின் ஹீர
ஏஆர் ரகுமான் இசை படத்திற்கு நிச்சயம் பக்கபலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு, திலீப் சுப்பராயன் ஆக்ஷன் காட்சிகள் அசத்தல்.
படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு டீசரைப் பார்த்ததும் அனைத்து ரசிகர்களுக்கும் நிச்சயம் எழும்.
Tags: Vikram, Srinidhi Shetty, Irfan Pathan, K.S. Ravikumar,