டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வாராவாரம் ஆரவாரம் செய்து வரும் உப்பு புளி காரம்

26 Jun 2024

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'உப்பு புளி காரம்', குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து அம்சங்களுடன், அனைத்து தரப்பு பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

'உப்பு புளி காரம்' வெப் தொடர் ஒரு கணவன் மனைவி, அவர்களின் நான்கு குழந்தைகள் என ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தில் நடக்கும் அட்டகாசம்,அன்பு, காமெடி, சேட்டை, அனைத்தும் சேர்ந்த கலவையாக கவனிக்க வைக்கிறது.

இதுவரையிலான கதையில், வீட்டைக் கட்டிக்காக்கும் அம்மா சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் வனிதா ஒரு தாயின் கனிவும் கவனிப்பும் நிரம்பியபடி அழகான நடிப்பை தந்துள்ளார். அப்பா சுப்பிரமணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பொன்வண்ணனின் நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகள் பார்ப்பவர்களை மனதை ஈர்க்கிறது. வழக்கறிஞர் சின்மயி கதாபாத்திரத்தில் வரும் ஆயிஷாவின் மெச்சுரிட்டியுடன் கூடிய கண்கவர் நடிப்பில் பிண்ணுகிறார். மேலும் சிவா கதாபாத்திரத்தில் வரும் கிருஷ்ணாவுக்கும் அவருக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் கலாட்டா ரகம்.

கனா காணும் காலங்கள் மூலம் புகழ் பெற்ற தீபிகா, யாஷிகா கதாபாத்திரத்தில் கல்லூரி முடித்து, வேலையில் சேட்டை செய்து மாஸ் காட்டி இருக்கிறார். உதய் கதாபாத்திரத்தில் வரும் கலக்கப்போவது யாரு புகழ் நவீனின் நடிப்பு, கனவுகளுக்கும் நிதர்சனத்திற்கும் இடையில் தள்ளாடும் இளைஞராக பிரதிபலித்திருக்கிறார். திப்புவாக வரும் ராஜ் ஐயப்பா, நடிகராக ஆசைப்பட்டு, அதற்கான முயற்சியில் ஈடுபடுவது ரசிக்க வைக்கிறது. மேலும், கீர்த்தியாக வரும் அஸ்வினி தனது துருதுரு நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். மகியாக வரும் தீபக் பரமேஸ் மனதில் நிற்கிறார்.

ஒவ்வொரு எபிசோட்டிலும், பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஆர்வத்தைத் தூண்டி விடும் அளவில் இயக்கி இருக்கிறார் இயக்குனர் எம். ரமேஷ் பாரதி. முதல் எபிசோட் பார்த்தவுடன் அடுத்து என்ன நடக்கும் என்று இரண்டு, மூன்று என்று தொடர்ச்சியாக அனைத்தையும் பார்க்க வைத்து விடுகிறார் இயக்குனர். குறிப்பாக ராஜ் ஐயப்பாவின் உண்மையான தந்தையின் பெயர் சுப்பிரமணி எனத் தெரியவரும் போது ஏற்படும் திருப்பம் சுவாரஸ்யத்தை கூட்டி இருக்கிறது.

பரபர திரைக்கதையுடன், அதிரடி திருப்பங்களுடன் பார்ப்பவர்களை உற்சாகத்தின் எல்லைக்குக் கூட்டிச் செல்வது இந்த தொடரின் சிறப்பு அம்சம்.

கவலைகளை மறந்து உற்சாகமாக 'உப்பு புளி காரம்' வெப் தொடரை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளியுங்கள். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையில் இந்த தொடரின் புது எபிசோடுகள் வெளியாகிறது.

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள 'உப்பு புளி காரம்' ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸிற்கு ஷேக் இசையமைக்க, பார்த்திபன் மற்றும் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது

Tags: uppu puli kaaram, disney plus hotstar

Share via: