’சர்தார் 2’வில் நடைபெற்றுள்ள மாற்றம்

29 Jun 2024

கார்த்தி நடிக்கவுள்ள ‘சர்தார் 2’ படத்தின் எடிட்டர் மாற்றப்பட்டுள்ளார்.

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள படம் ‘சர்தார் 2’. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதத்தில் படத்துக்கான ப்ரோமோ ஷுட் நடைபெறவுள்ளது.

அதன் பணிகளை முடித்து வெளியிட்டவுடனே, தான் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதில் நாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான், கஜகஸ்தான், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் நடித்த திட்டமிடப்பட்டுள்ளது.

எப்போதுமே மித்ரன் படங்கள் என்றாலே எடிட்டராக ரூபன் தான் பணிபுரிவார். ஆனால், ‘சர்தார் 2’ படத்தில் விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், முதல் பாகத்தில் இசையமைப்பாளராக பணிபுரிந்த ஜிவிபிரகாஷும் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது

Tags: sardar 2

Share via: