சூர்யா – ரவிகுமார் படம் டிராப்
29 Jun 2024
ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ படத்தினை கடைசியாக இயக்கி இருந்தார் ரவிகுமார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சூர்யா நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார். இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது.
இது தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தது. ’அயலான்’ வெளியான உடன், சூர்யா நடிக்கவுள்ள படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் ஈடுபட்டு வந்தார் ரவிகுமார். இதன் இறுதிவடிவம் சூர்யாவுக்கு அனுப்பப்பட்டது.
தற்போது இந்தப் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ரவிகுமாருக்கு கொடுக்கப்பட்ட தேதிகளை வேறொரு இயக்குநருக்கு கொடுக்க சூர்யா முடிவு செய்திருக்கிறார். இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
Tags: suriya, ravikumar
