தியேட்டர்கள் மூடல், புதிய படங்களுக்கு பாதிப்பு
16 Mar 2020
கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.
அவற்றில் ஒன்றாக எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் (தாலுகா) உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் (மால்கள்) 31-3-2020 வரை மூடவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வாரம் 20ம் தேதி பல புதிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தன. தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டுளள காரணத்தால், அந்தப் படங்களின் வெளியீட்டிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மார்ச் 20ம் தேதி, “காக்டெய்ல், எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும், ஞானச்செருக்கு, கன்னி ராசி, காவல்துறை உங்கள் நண்பன், மரிஜுவானா, பல்லு படாம பாத்துக்க, புறநகர், சூடு, டைம் இல்ல” ஆகிய 10 படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தன.
தற்போது இவற்றில் எத்தனை படங்கள் 20ம் தேதி வெளிவரும் எனத் தெரியவில்லை. பலர் தங்களது படங்களின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளனர்.
இதனால், அடுத்த மாதம் வர திட்டமிடப்பட்டுள்ள படங்களுக்கும் பாதிப்பு வரும்.
Tags: corono, covid 19, tamil cinema