கவின் நடிக்கும் ‘லிப்ட்’
13 Mar 2020
ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி தயாரிக்கும் படம் ‘லிப்ட்’.
விளம்பரப் படங்களை இயக்கியுள்ள வினித் வரபிரசாத் இப்படத்தை இயக்குகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் பிரபலமாகி ‘நட்புனா என்னான்னு தெரியுமா’ படத்தில் நாயகனாக அறிமுமான கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கவின் நடித்து முடித்துள்ள படம் இது.
‘பிகில்’ படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நாயகியாக நடிக்கிறார்.
த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் கதை மீது படக்கழுவினர் பெரிய நம்பிக்கை வைத்துள்ளதாக தயாரிப்பாளர் தெரிவிக்கிறார்.
யுவா ஒளிப்பதிவு செய்ய, மைக்கேல் பிரிட்டோ இசையமைக்கிறார்.
படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும்.
Tags: lift, kavin, amritha iyer, Vineeth Varaprasad