அன்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் ‘கான்ட்ராக்டர் நேசமணி’. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது. 

அறிமுக இயக்குனர் சுவாதீஷ் எம்.எஸ் இயக்கும் இப்படத்தில் யோகிபாபு, ஓவியா மற்றும் பலர் நடிக்கிறார்கள். 

விஜய், சூர்யா நடித்த ‘பிரண்ட்ஸ்’ படத்தில் கான்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் ஒருவர் விளையாட்டாக ‘நேசமணி’ பற்றி ஒரு பதிவிட போட, அது #PrayforNesamani என்று ஹேஷ்டேக் உருவாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்திலேயே, ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்ற தலைப்பில் தமிழில் படமெடுக்க பலரும் விரும்பினர்.

அன்கா மீடியா சார்பில் ‘வால்டர்’ படத்தின் இயக்குநர் யு.அன்பு, ‘பகைவனுக்கு அருள்வாய்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்தி கே தில்லை ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். சுவாதீஷ் எம்.எஸ்., ‘வால்டர்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.  

இப்படத்திற்கு. 'வால்டர்' பட இயக்குநர் யு.அன்பு கதை எழுதியிருக்கிறார். தர்மபிரகாஷ் இசையமைக்க, சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்கிறார். 'மிருதன்' படப் புகழ் வெங்கட் ரமணன் படத்தை தொகுக்க, ஏ.ஆர்.மோஹன் கலை இயக்கத்தை கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை 'ராட்சசன்' படப் புகழ் விக்கி அமைக்கிறார். திருக்கிறார். ‘சார்பட்டா பரம்பரை’ படப் புகழ்  மெட்ராஸ் மீரான் பாடல்களை எழுதுகிறார்.

இந்த படத்தின் எக்ஸிக்யூடிவ் தயாரிப்பாளராக எஸ்.சரவணக்குமார் செயல்படுகிறார். புரொடக்‌ஷன் கன்ட்ரோல் பணிகளை பாலா தில்லை, எஸ்.ஏ.தாஸ் மேற்கொள்கின்றனர். ஆடை வடிவமைப்பு செய்கிறார் ரெபேக்கா மரியா. ஸ்டில்ஸ் எஸ்.சக்தி ப்ரியன், டிசைன் தினேஷ் அசோக், இப்படத்திற்கு மக்கள் தொடர்பாளராக யுவராஜ் பணியாற்றுகிறார்.

படம் குறித்து கதாசிரியரும், தயாரிப்பாளர்களுள் ஒருவருமான யு.அன்பு கூறுகையில், 

"இத்திரைப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான சயின்ஸ் ஃபிக்‌ஷ்ன் ஜானரைச் சேர்ந்தது. இந்தப் படத்தில் யோகிபாபு முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு நடிப்பில் இதுவே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் என்று சொல்லலாம். இந்தப் படம் சென்னை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் படமாகவுள்ளது. படத்திற்காக கொடைக்கானலில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது," என்றார்.

படத்தின் தொடக்கவிழாவில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், தேனப்பன், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, சக்திவேல், சி.வி குமார், சதீஷ், ஸ்ரீதர், 'அடிதடி' முருகன், திரைப்பட இயக்குனர்கள் விருமாண்டி, தாஸ் ராமசாமி, நவீன், தங்கம் சரவணன், முத்துக்குமரன், மனோஜ் இவர்களுடன் நடிகர் சிபி சத்யராஜ், நடிகை ஷனம் ஷெட்டி  உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.