கலர்ஸ் டிவி தமிழ் - ‘வெற்றி விநாயகர்’ புதிய தொடர்

24 Jul 2020

கலர்ஸ் டிவி தமிழில் வரும் ஜுலை 27ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை ‘வெற்றி விநாயகர்’ என்ற பக்தித் தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

பால விநாயகர் பற்றியும், அவருக்கும் அவருடைய அம்மா பார்வதிக்கும் உள்ள பாசப்பிணைப்பும் இத் தொடரில் இடம் பெறுகிறது. 

விநாயகரின் வாழ்க்கையிலிருந்து அதிகம் அறியப்படாத பல நிகழ்வுகளும் பார்வையாளர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளதாம்.

விநாயகர் கதாபாத்திரத்தில் ஸ்வராஜ் எவ்லே, சாய்லி பாட்டீல் பார்வதியாகவும், அன்லேஷ் தேசாய் சிவபெருமானாகவும் நடித்துள்ளார்கள்.

கொரானோ ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து தன்னுடைய தொடர்களை கலர்ஸ் டிவி தமிழ் ஒளிபரப்பி வந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று

Tags: colors tv tamil, vetri vinayagar,

Share via: