கலர்ஸ் டிவியில் ‘முருகன் ரகசியம்’

24 Jul 2020

தமிழ்க் கடவுள் முருகன் பற்றியும் கந்த சஷ்டி கவசம் பற்றியும் கடந்த சில நாட்களாகவே ஒரு பரபரப்பு நிலவி வருகிறது.

ஆடி மாதத்தில் நடைபெறுகின்ற கந்த சஷ்டி திருவிழா நிகழ்வையொட்டி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்திலிருந்து ஒரு சிறப்பு நிகழ்வை கலர்ஸ் தமிழ் டிவி பிரத்யேகமாக ஒளிபரப்ப இருக்கிறது.  

சஷ்டியின் முக்கியத்துவத்தை நேர்த்தியாக எடுத்துரைக்கும் இந்த நிகழ்வானது, பார்வையாளர்கள் மனரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் வலுவோடும், ஆரோக்கியத்தோடும் வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் உதவியாக இருக்கும்.  

இதைத்தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களை உணர்வுரீதியாக ஒருங்கிணைக்கின்ற, கந்தசஷ்டியை அனைவரும் ஒன்றுகூடி ஓதுகின்ற ஒரு நிகழ்வும் இடம்பெற உள்ளது.  

‘முருகன் ரகசியம்’ என்ற பெயரில் இச்சிறப்பு நிகழ்ச்சியானது, 2020 ஜுலை 26 ஞாயிறன்று மாலை 5.30 மணியிலிருந்து கலர்ஸ் தமிழ் டிவியில் மட்டும் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது. 

Tags: colos tv, murugan ragasiyam, colors tamil,

Share via: