‘டேனி‘யில் தேவையில்லாத காட்சிகள் இல்லை - வரலட்சுமி

24 Jul 2020

பி.ஜி. மீடியா ஒர்க்ஸ் சார்பில், பி.ஜி.முத்தையா, தீபா தயாரித்துள்ள படம் ‘டேனி’.

சந்தானமூர்த்தி இயக்கத்தில், சந்தோஷ் தயாநிதி இசையமைப்பில், வரலட்சுமி சரத்குமார், சாயாஷி ஷின்டே, வேலராமமூர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துளளார்கள்.

படம் பற்றி படத்தின் கதாநாயகி வரலட்சுமி கூறுகையில்,

“டேனி என்கிற நாய் தான் படத்தின் ஹீரோ. இதில் இன்ஸ்பெக்டராக நான் நடித்துள்ளேன். நான் எந்த கதாபாத்திரத்துக்கும் யாரிடமும் கற்றுக் கொள்வதில்லை. இந்தப் படத்தில் காவல்துறை உடையணிந்தவுடன், இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதற்கு ஏற்றார் போல் நடித்துள்ளேன்.

நாய்க்குட்டியுடன் நடித்தது பிடித்த விஷயம். கதை ரொம்ப அழகாக இருந்தது. ஒரு கொலை நடக்கிறது, அதை எப்படி ஒவ்வொரு கட்டமாக தாண்டி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதுன் கதை. தேவையில்லாமல் எந்தவொரு காட்சியுமே இருக்காது.

படப்பிடிப்பு தளத்தில் நாயைப் பார்த்தவுடன் முதலில் போய் கட்டிப்பிடித்துவிட்டேன். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்குப் போனதிலிருந்து டேனி எப்போது வருகிறது என்று தான் கேட்டுக் கொண்டே இருந்தேன். 

அதனுடைய காட்சிகளுக்குப் பிறகு அழகாக போய் அதன் இருக்கையில் அமர்ந்து கொள்ளும். நமக்கு இது கேமரா, படப்பிடிப்பு என்றெல்லாம் புரியும். ஆனால், டேனியே பல டேக்குகள் வாங்காமல் ட்ரெய்னர் என்ன சொல்றாரோ அதை சரியாக செய்து கொடுத்தது,” என்கிறார் வரலட்சுமி.

தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தை மையப்படுத்தி தான் இப்படத்தின் கதை நடக்கிறது. அந்த காவல் நிலையத்தின் மையத்துக்குள் நடக்கும் ஒரு கொலையைத் துப்பறியும் காவல்துறை அதிகாரியாக வரலட்சுமி நடிக்கிறார். அவருடன் பிங்கி என்ற ஒரு நாய் நடித்திருக்கிறது. படத்தில் அதன் பெயர் தான் டேனி. உடனிருக்கும் மனிதர்களை நம்பாமல், வரலட்சுமி,  டேனி உடன் இணைந்து அந்தக் கொலையை எப்படி துப்பு துலக்கினார்என்பதுதான் இப்படத்தின் கதை

‘டேனி’ ஆகஸ்ட் 1ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Tags: danny, varalakshmi

Share via: