கலர்ஸ் தமிழ் - நாளை ‘அக்னி தேவி, என் ராசாவின் மனசிலே’ படங்கள் ஒளிபரப்பு

12 Jun 2021

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, ‘சன்டே சினி காம்போ’வில் பொழுதுபோக்கு நிறைந்த திரைப்படங்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் இந்த வாரம், நாளை ஜுன் 13-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ‘அக்னி தேவி’ திரைப்படத்தையும் மாலை 3.30 மணிக்கு என்றும் மனதைவிட்டு நீங்காத படமான ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தையும் ஒளிபரப்ப உள்ளது.

2019-ம் ஆண்டு வெளியான ‘அக்னி தேவி‘ திரைப்படத்தை ஜான் பால் ராஜ் மற்றும் ஷியாம் சூர்யா ஆகியோர் இயக்கி உள்ளனர். இத்திரைப்படமானது முற்றிலும் அரசியல் சம்பந்தமான திரைப்படம் ஆகும். 

பாபி சிம்ஹா, மது மற்றும் ரம்யா நம்பீசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு பத்திரிகையாளரின் கொடூரமான கொலை குறித்து விசாரிக்கும் நேர்மை தவறாத காவலரைப் பற்றியதாகும். அவரது சந்தேகம் ஊழல் நிறைந்த அரசியல்வாதியை நோக்கி செல்கிறது. இதன் காரணமாக அவரிடம் நடத்தப்படும் விசாரணை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. காவல்துறை எவ்வாறு பல தடைகளைத் தாண்டி குற்றவாளியைப் பிடிக்கிறது என்பதே இதன் கதையாகும். 

மதியம் 3.30 மணிக்கு 1991-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ‘என் ராசாவின் மனசிலே’ படம் ஒளிபரப்பாக உள்ளது. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் ராஜ்கிரண், மீனா, வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Tags: colors tamil, colors tv

Share via: