ஹாட்ஸ்டார் ஓடிடி - கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’
17 Jan 2022
விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி நடந்து வருகிறது.
நேற்றுதான் 5வது சீசன் முடிவடைந்தது. டிவி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இந்த நிகழ்ச்சியை ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாகக் கொண்டு வர உள்ளார்கள்.
ஜனவரி 30ம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ளது.
கடந்த நான்கு சீசன்களில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் இந்த ஓடிடி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர்.
கமல்ஹாசனே ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியையும் தொகத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியை 24 x 7 தொடர்ந்து பார்க்கலாம்.
இது பற்றி கமல்ஹாசன் கூறுகையில், “பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் OTT பதிப்பு டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.
OTT பதிப்பையும் தொகுத்து வழங்குவதன் மூலம் தொடர்ந்து உங்களுடன் தொடர்பில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த புதிய வடிவத்தை இப்போது 24/7 நேரமும் காணலாம். இந்த புதிய அனுபவம் உங்களுக்கு புத்துணர்ச்சியூட்டுவதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்குமென நான் 100% நம்பிக்கை கொண்டுள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
Tags: hotstar, diney plus hotstar, kamalhaasan, bigg boss ultimate