ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்' பேனர் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி - பவன் குமார் தயாரிப்பில், லிங்குசாமி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், ராம் பொத்தினேனி, கிர்த்தி ஷெட்டி, ஆதி, அக்ஷரா கவுடா மற்றும் பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் படத்திற்கு ‘தி வாரியர்’ என்ற பெயரை அறிவித்துள்ளனர்.

தெலுங்கில் இளம் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ராம் பொத்தினேனி. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆதி வில்லனாக நடிக்கிறார். இன்று படத்தின் பெயர் அறிவிப்போடு முதல் பார்வையையும் வெளியிட்டுள்ளார்கள்.

வரும் ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என்று தெரிகிறது.