பீஸ்ட் - சென்னையில் ஆரம்பமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு
01 Jul 2021
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பீஸ்ட்’.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஜார்ஜியா நாட்டில் ஆரம்பமானது. அங்கு நடைபெற்ற முதல் கட்டப் படப்பிடிப்பு கொரானோ இரண்டாவது அலை தீவிரமாகும் வரை நடைந்தது. அதன்பின் படக்குழுவினர் சென்னை திரும்பினர்,
கடந்த இரண்டு மாத காலமாக கொரானோ தாக்கத்தால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. தற்போது ஊரடங்கு தளர்வுகளில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இன்று முதல் சென்னையில் உள்ள தனியார் அரங்கில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்கில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு ஆரம்பமானது. இதில் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். இந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நடைபெறும் எனத் தெரிகிறது.
படத்தை 2022 பொங்கலுக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளது.
Tags: beast, vijay, nelson, pooja hegde, anirudh, sun pictures