'இந்தியன் 2' விவகாரம், நீதிமன்றத்தின் புதிய உத்தரவு

30 Jun 2021

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இந்தியன் 2’.

கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற கிரேன் விபத்தில் மூவர் மரணம் அடைந்ததை அடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதன்பின் கொரானோ முதல் அலை வந்ததால் படப்பிடிப்பு நடத்தப்படவில்லை. இதனிடையே, ஷங்கர் தெலுங்கில் ஒரு படத்தையும், ஹிந்தியில் ஒரு படத்தையும் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.

அப்போது, லைக்கா நிறுவனம் தங்களது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை முடிக்காமல் ஷங்கர் வேறு படங்களை இயக்கப் போகக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

நீதிமன்ற ஆலோசனையின்படி நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் வெற்றியடையவில்லை. அதனால், இரு தரப்பும் மீண்டும் நீதிமன்றத்தையே நாடியது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, பிரச்சினைக்கு தீர்வு காண  மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமித்தது  சென்னை உயர் நீதிமன்றம்.

நீதிபதி ஆர்.பானுமதியின் அறிக்கைக்குப் பிறகு வழக்கில்  தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Tags: indian 2, shankar, kamalhaasan, kajal agarwal, anirudh

Share via: