அட்லியின் புதிய திட்டம்

21 Jun 2024

அல்லு அர்ஜுன் படம் சிக்கலாகி இருப்பதால், தனது அடுத்த படத்திற்கு புதிய திட்டம் ஒன்றிணை போட்டுள்ளார் அட்லி.

‘ஜவான்’ படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திற்காக கதையொன்றை தயார் செய்து வந்தார் அட்லி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்த இந்தப் படத்துக்கு சம்பளம் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இந்தப் படத்தினை கைவிட்டுவிட்டார் அட்லி.

தற்போது இந்தி படமொன்றினை அட்லி இயக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இதனையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. ‘ஜவான்’ வெற்றியால், அதில் நடிப்பதற்கு பல்வேறு முன்னணி நடிகர்களும் தயாராக இருக்கிறார்கள். அட்லி உருவாக்கி இருக்கும் கதை இரண்டு நாயகர்களை மையப்படுத்திய கதையாகும். 

இதில் கதையின் நாயகனாக சல்மான்கான் நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இன்னொரு நாயகனாக தென்னிந்திய நாயகனை நடிக்க வைக்க அட்லி முடிவு செய்திருக்கிறார். ஒரே படத்தில் அனைத்து மொழி நாயகர்களையும் இணைத்துவிட முடிவு செய்திருக்கிறார். இதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனமும் சம்மதம் தெரிவித்திருக்கிறது.

Tags: atlee, salman khan

Share via: