கைவிடப்படும் சிம்பு - தேசிங்கு பெரியசாமி படம்

21 Jun 2024

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் கைவிடப்படும் எனக் கூறப்படுகிறது.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினியை சந்தித்து கதையொன்றை கூறினார் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. இரண்டாவது படமாக இவ்வளவு பெரிய பட்ஜெட் எப்படி இயக்குநர் கையாள்வார் என்ற யோசனையில் படத்தினை வேண்டாம் என கூறிவிட்டார் ரஜினி.

அந்தக் கதையினை பல்வேறு நடிகர்களிடம் கூறி, இறுதியாக சிம்பு நடிப்பது உறுதியானது. அதற்கான பல்வேறு பயிற்சிகள் எல்லாம் மேற்கொண்டு வருகிறார் சிம்பு. ஆனால், தற்போதுள்ள ஓடிடி, தொலைக்காட்சி வியாபார சூழலை கணக்கில் கொண்டு இந்தப் படம் கைவிடப்படும் எனக் கூறப்படுகிறது.

ஏனென்றால், படத்தின் பட்ஜெட்டை குறைக்க எவ்வளவு முயன்று ஒரளவுக்கு மேல் முடியவில்லை. இந்தப் பட்ஜெட்டில் இதனை தயாரித்தால் கண்டிப்பாக பெரும் நஷ்டமே தற்போதைய சூழலில் மிஞ்சும் என்று நினைக்கிறது ராஜ்கமல் நிறுவனம். இதனால் இந்தப் படத்தின் தயாரிப்பு பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறது.

தேசிங்கு பெரியசாமி படத்துக்காக கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகையில் தான் ‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதனால், ராஜ்கமல் நிறுவனம் பெரியளவில் கவலைக் கொள்ளாமல் விரைவில் கைவிடப்பட்ட அறிவிப்பினை வெளியிடவுள்ளது. 

Tags: silambarasan, design periyasamy

Share via: