அமிதாப்பின் 80வது பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்த ‘புராஜக்ட் கே’

12 Oct 2022

ஹிந்தித் திரையுலகத்தின் சீனியர் நடிகரான அமிதாப்பச்சன் நேற்று தன்னுடைய 80வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அதைக் கொண்டாடும் விதத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் ‘புராஜக்ட் கே’ குழுவினர் சிறப்பு பதாகை ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் அந்தப் படத்தில் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தைத் தயாரிக்கும் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம், '' கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக ரசிகர்களையும், பார்வையாளர்களையும் மகிழ்வித்து கொண்டிருக்கும் சக்தி மையம்!. இந்தத் தருணத்தில் உங்களுடைய புதிய அவதாரத்தை உலகுக்கு காட்ட ஆவலுடன் காத்திருக்கிறோம். உங்களிடம் இருக்கும் ஆற்றல் உங்களுடனேயே நீடித்து இருக்கட்டும். எங்களுக்கு பின்னால் இருக்கும் அளவற்ற சக்தி நீங்கள்தான். அமிதாப்பச்சன் ஐயா...! -  புராஜெக்ட் கே படக் குழு,'' என  தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.

Tags: project k, nag ashwin, prabhas, deepika padukone, amitabh bachchan

Share via: