விஜய் டிவியில் ‘எங்கிட்ட மோதாதே 2’

15 May 2019
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘எங்கிட்ட மோதாதே’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மே 19 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. ஒவ்வொரு வாரமும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிவி சீரியல் நட்சத்திரங்கள் குடும்பமாக வந்து இந்த நிகழ்ச்சியில் போட்டியிட உள்ளார்கள். ராஜா ராணி, மௌன ராகம், சின்னத்தம்பி, பாரதி கண்ணம்மா மற்றும் பல தொடர்களிலிருந்து போட்டியிடப் போகிறார்கள். இந்த வாரம் ஈரமான ரோஜாவே மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர்களிலிருந்து வந்து போட்டியிட உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் நான்கு கலகலப்பான சுற்றுகள் உள்ளன. இதில் நட்சத்திரங்களின் ஆடல், பாடல், விளையாட்டு, நடிப்பு என பொழுதுபோக்காகவே சுற்றுகள் இருக்கும். இந்த நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்க உள்ளார். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார் திவ்யதர்ஷினி. நிகழ்ச்சி முழுவதிலும் ‘கலக்கப் போவது யாரு’ தீனா எல்லோரையும் கேலி செய்து கொண்டிருப்பார். நிகழ்ச்சியில் நகைச்சுவை நட்சத்திரங்களும் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

Share via: