பிக் பாஸ் 3 - விரைவில்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு
15 May 2019
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என விஜய் டிவி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வீடியோ புரோமோ மூலம் அறிவித்துள்ளது.
2017ம் ஆண்டு விஜய் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. 2018ம் ஆண்டு ஒளிபரப்பான சீசன் 2 நிகழ்ச்சியும் வெகுவாக ரசிக்கப்பட்டது.
அடுத்து 3வது சீசன் ஜுன் மாதம் ஆரம்பமாக உள்ளது. இதற்கான வேலைகள் ஏற்கெனவே ஆரம்பமாகி உள்ளன.
இன்று அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். யார் யார் போட்டியாளர்கள் என்பதில் தயாரிப்புக் குழு தீவிரமாக உள்ளது.