வேதாளம் - விமர்சனம்

11 Nov 2015
தயாரிப்பு - ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ் இயக்கம் - சிவா இசை - அனிருத் ஒளிப்பதிவு - வெற்றி படத் தொகுப்பு - ரூபன் சண்டைப் பயிற்சி - சில்வா வெளியான தேதி - நவம்பர் 10, 2015 நடிப்பு - அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி, கபீர் சிங், ராகுல்தேவ், அனிகெட், அஸ்வின், கோவை சரளா, தம்பி ராமையா, சுதா மற்றும் பலர். கதைச் சுருக்கம் தங்கை லட்சுமி மேனனை கொல்கத்தாவில் உள்ள புகழ் பெற்ற ஓவியக் கல்லூரியில் சேர்ப்பதற்காக அஜித் வருகிறார். கால் டாக்சி டிரைலவராகவும் வேலைக்குச் சேர்கிறார். லட்சுமி மேனனைப் பார்த்து அஸ்வின் காதல் கொள்கிறார். தங்கைக்காக அந்தத் திருமணத்திற்கும் சம்மதிக்கிறார். இதனிடையே அஜித் செய்யும் ஒரு கொலையை நேரில் பார்த்து விடுகிறார் ஸ்ருதிஹாசன். அஸ்வினின் தங்கையான இவர் கொலைகாரன் குடும்பத்தில் நாங்கள் பெண் எடுக்க மாட்டோம் என்கிறார். ஆனால், லட்சுமி மேனன் என் தங்கையே இல்லை என்ற அதிர்ச்சியான உண்மையைச் சொல்கிறார் அஜித். அப்படியென்றால் அவர்களிருவரும் யார் ? அஜித் ஏன் கொலை செய்கிறார் என்பதற்கான விடைதான் படத்தின் மீதிக் கதை. விமர்சனச் சுருக்கம் படம் முழுவதுமே அஜித் நிறைந்து காணப்படுகிறார். அப்பாவியாக ஒரு முகம், ஆவேசமானவராக மற்றொரு முகம், கலகல தாதாவாக மற்றுமொரு முகம் என அஜித்துக்கு நடிக்க நல்ல வாய்ப்பு. அதிலும் வில்லன்களைக் கொல்லும் போது அஜித்தின் ஆவேசமும், அவரின் பலமான தோற்றமும் அவரது ரசிகர்ளை அடடே போட வைக்கும். நாயகி ஸ்ருதிஹாசனை விட தங்கை லட்சுமி மேனனுக்கு படத்தில் முக்கியத்துவம் அதிகம். அண்ணன், தங்கை பாசத்தில் 2015ன் பாசமலர். ‘ஆலுமா டோலுமா, வீர விநாயகா’ ஆகிய இரண்டு பாடல்களிலும், பின்னணி இசையிலும் அனிருத் அசத்தியிருக்கிறார். சூரியின் நகைச்சுவையையும், சில காட்சிகளின் லாஜிக் மீறல்களையும் தவிர்த்துப் பார்த்தால் இந்த ‘வேதாளம்’, அஜித்துக்கு ஒன் மோர் சூப்பர் டூப்பர் ஹிட்.

Tags: vedalam

Share via: