மாஸ்க் - விமர்சனம்
22 Nov 2025
'மாஸ்க்', ஒரு விறுவிறுப்பான திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இயக்குநர் விகர்ணன் எழுதி இயக்கிய இப்படத்தில், தேர்தல் செலவுகளுக்காக மறைத்து வைக்கப்பட்ட 440 கோடி ரூபாய் பணத்தை முகமூடி அணிந்த கும்பல் திருடுவதும், அதைத் தேடும் துப்பறியும் கதையும் மையமாக அமைந்துள்ளது. கவின், ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மா முதன்மை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், அரசியல், பணம், மர்மம் ஆகியவற்றை இணைத்து, கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டுகளுடன் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவுகளுக்காக ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு மறைத்து வைக்கப்பட்ட அரசியல்வாதி பவனின் 440 கோடி ரூபாய் பணத்தை, ஆண்ட்ரியாவின் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து முகமூடி அணிந்த ஒரு கும்பல் திருடுகிறது. இவ்வளவு பெரிய தொகையைப் பதுக்கி வைத்திருக்கும் ஆண்ட்ரியா யார்? அந்தப் பணத்தைக் கண்டுபிடிக்க அவரால் நியமிக்கப்படும் கவின், துப்பறிந்து அந்த 'மாஸ்க்' கும்பலைப் பிடிக்கிறாரா? பணத்தைத் திருடியது யார், என்ன காரணம்? இதுதான் விகர்ணன் இயக்கிய 'மாஸ்க்' படத்தின் அடிப்படைக் கதை.
வழக்கமான ஹீரோ-ஹீரோயின் காதல் டெம்ப்ளேட்டைத் தாண்டி, ஒரு புதிய பார்மெட்டில் கதையைச் சொல்ல முயற்சிக்கிறார் இயக்குநர் விகர்ணன், அது முதல் சில காட்சிகளிலேயே தெரிகிறது. அதற்கேற்ப கவின், ஆண்ட்ரியா, ருஹானி போன்ற கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சற்று நேர்மையான துப்பறியும் அதிகாரி போன்ற கவின், நண்பர்களின் உதவியுடன் பணத்துக்காக சில சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுகிறார். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கொண்டவராகத் தோன்றும் ஆண்ட்ரியாவின் உண்மை முகம் வேறு. இவர்களுக்கிடையேயான பணம் சம்பந்தப்பட்ட கண்ணாமூச்சி ஆட்டமே படத்தின் மையம்.
ஹீரோவாக இருந்தாலும் வழக்கமான இலக்கணங்களைத் தாண்டி நடித்திருக்கிறார் கவின். காமெடி கலந்து, சற்று வில்லத்தனம் சேர்த்த அவரது நடிப்பு அருமையாகப் பொருந்தியுள்ளது. குறிப்பாக, வட இந்தியப் பெண் ருஹானியுடனான நட்பு மற்றும் எல்லை மீறும் காட்சிகள் கலகலப்பை ஏற்படுத்துகின்றன. 'நானும் மோகன் மாதிரி' என்று இருவரும் சொல்லும் காட்சி தியேட்டரில் கைதட்டல்களை அள்ளுகிறது. அதேபோல், ஆண்ட்ரியாவுடனான மோதல் காட்சிகளிலும் கவினின் பெர்பார்மன்ஸ் ரசிக்க வைக்கிறது. வழக்கமான காதல் அல்லது திருமணக் காட்சிகள் இல்லாமல் கதை நகர்வது, கவினை திருமணமானவராகவும் குழந்தைக்கு தந்தையாகவும் காட்டியிருப்பது புதுமை.
தயாரிப்பாளராகவும் நடித்திருக்கும் ஆண்ட்ரியா, வில்லி வேடத்தில் வருகிறார். வெளியே சமூக சேவகியாகத் தோன்றி, உள்ளே வேறு 'சர்வீஸ்' செய்யும் கதாபாத்திரத்தில் அழகாக நடித்துள்ளார். அவரது கெட்அப் மற்றும் க்ளோஸ்அப் ஷாட்கள் ஈர்க்கின்றன. இருப்பினும், இன்னும் கொஞ்சம் இயல்பாக நடித்திருக்கலாம். இவர்களைத் தவிர, வில்லனாக வரும் பவன், கவினின் அப்பாவாக சந்திரன், நண்பராக கல்லூரி வினோத் ஆகியோர் சிறப்பான தேர்வுகள்.
கவினின் மாமனாராக வரும் சார்லி, ஆரம்பத்தில் அப்பாவியாகவும் பாசக்காரராகவும் தோன்றுகிறார். கடைசியில் அவரது கதாபாத்திர மாற்றம் மற்றும் டயலாக்குகள் எதிர்பாராதவை. சாமான்ய மக்களின் குரலாக அவரது செயல்பாடு அமைகிறது. வெல்டன் சார்லி! ஆண்ட்ரியா டீமில் வரும் பேட்டரி, சில காட்சிகளில் தோன்றும் ரெடின் கிங்ஸ்லீ ஆகியோரும் ரசிக்க வைக்கின்றனர். படத்தின் உண்மையான ஹீரோ திரைக்கதைதான். 440 கோடியைத் திருடியது யார் என்ற கேள்வியும் அடுத்தடுத்த காட்சிகளும் விறுவிறுப்பைத் தருகின்றன. இடையே ஓட்டல், ஆண்ட்ரியாவின் பிஸினஸ், ப்ளாஷ்பேக், அரசியல்வாதிகளின் அராஜகம் போன்ற காட்சிகள் ஓகே.
முதல் பாதியில் வேகம் சற்று குறைவாக இருந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பு, குறிப்பாக கிளைமாக்ஸ் மற்றும் அதிலுள்ள ட்விஸ்ட் படத்தை ரசிக்க வைக்கிறது. ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளையும் ஆண்ட்ரியாவையும் அழகாகக் காட்டுகிறது. திரைக்கதையைத் தாண்டி படத்தை உயர்த்துவது ஜி.வி. பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும். 'கண்ணுமுழி' பாடல் ஆட வைக்கிறது, 'இதுதான் எங்கள் உலகம்' மற்றும் கிளைமாக்ஸ் பாடல் சிறப்பு. எம்.ஆர். ராதா டச் கொண்ட வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. இயக்குநர் நெல்சன் வாய்ஸ் ஓவர், அப்பாவி குடும்பத் தலைவியாக வரும் தொகுப்பாளர் அர்ச்சனாவின் நடிப்பும் ரிலாக்ஸ்ட்.
சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களைப் பயன்படுத்தி பணத்தைக் கடத்தும் காட்சி, கவின்-ருஹானி ஈர்ப்பு காட்சிகள், சார்லி சம்பந்தப்பட்ட ட்விஸ்ட் ஆகியவை படத்தை கமர்ஷியலாக உயர்த்துகின்றன. பவன் சம்பந்தப்பட்ட அரசியல் காட்சிகள் பல படங்களில் பார்த்தவை. தயாரிப்பாளராக இருப்பதால் ஆண்ட்ரியாவை டீசன்ட் வில்லியாகக் காட்டியிருப்பது வேகத்தடை. இன்னும் ஷார்ப்பாக எடுத்திருக்கலாம், முதல் பாதியை விறுவிறுப்பாக்கியிருக்கலாம் என சில குறைகள் இருந்தாலும், மாறுபட்ட திரைக்கதை, நடிகர்களின் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ஆகியவற்றால் 'மாஸ்க்' பாஸ் மார்க்கைத் தாண்டி வெற்றி பெறுகிறது.

Tags: mask, kavin, andrea, gv prakashkumar, vikarnan ashok