ஜடா - விமர்சனம்

08 Dec 2019

கதை வட சென்னை பகுதியைச் சேர்ந்த கதிருக்கு கால்பந்து விளையாட்டு வீரராக வேண்டும் என ஆசை. அதே சமயம் தனக்கு கால்பந்து விளையாட சொல்லிக் கொடுத்து ‘செவன்ஸ்’ என்ற முரட்டுத்தமான கால்பந்து போட்டியில் மரணமடைந்த கிஷோருக்காக ‘செவன்ஸ்’ விளையாடி, அவரைக் கொன்றவர்களைப் பழி வாங்க நினைக்கிறார். அது நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நடிப்பு ‘பிகில்’ படத்திற்குப் பிறகு மீண்டும் கால்பந்து விளையாட்டு வீரராக கதிர். இந்தப் படத்தில் தனி நாயகனாக ஜொலிக்கிறார். கால்பந்து விளையாட்டில் தேர்ந்தவராக நடித்திருக்கிறார். கிளைமாக்சுக்கு முன்பாக ஆக்ஷனிலும் இறங்குகிறார். இரண்டாவது கதாநாயகன் போல படம் முழுவதும் வருகிறார் யோகி பாபு. ஆனால், அடிக்கடி காணாமல் போய்விடுகிறார். நாயகி ரோஷினி பிரகாஷுக்கு அதிக வேலையில்லை. வில்லனாக ஓவியர் எபி ஸ்ரீதர், தோற்றத்தில் மிரட்டுகிறார். கால்பந்து கோச்சாக கிஷோர், வழக்கம் போல மனதில் இடம் பிடிக்கிறார்.

இசை, மற்றவை சாம் சிஎஸ் இசையில் ‘அப்படிப் பார்க்காதே’ பாடல் இனிமை. ஒளிப்பதிவாளர் கால்பந்து காட்சிகளிலும், இடைவேளைக்குப் பின் கிராமத்துக் காட்சிகளிலும் நன்றாக லைட்டிங் செய்திருக்கிறார்.

+

இடைவேளை வரையிலான படம்

-

இடைவேளைக்குப் பிறகான படம்

Tags: jada

Share via: