‘ரைட்டர்’  பார்த்து வெற்றிமாறன் பாராட்டு

22 Dec 2021

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் டிசம்பர் 24ம் தேதி வெளியாக உள்ள ‘ரைட்டர்’ படத்தின் சிறப்புக்காட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் கலந்து கொடு படத்தைப் பார்த்தனர்.

படம் பார்த்தபிறகு இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குனர் பிராங்ளினையும் கட்டிப்பிடித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.

“ரொம்ப முக்கியமான படத்தை தமிழ் சினிமாவிற்கு தந்திருக்கிறீர்கள். சமுத்திரக்கனியின் நடிப்பு தனித்துவமாக இருக்கிறது.  இந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப்பட வரிசையில் ரைட்டரும் இருக்கும். தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் தங்களது திறமைகளை சிறப்பாக  வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட படங்களை தயாரித்துவரும் இரஞ்சித்துக்கு எனது வாழ்த்துக்களும் அன்புகளும்,” என்றார்.

Tags: Writer, Samuthirakani, Ineya, Franklin Jacob, Govind Vasantha

Share via: