பா ரஞ்சித் இயக்கத்தில் 'விக்ரம் 61' பூஜையுடன் ஆரம்பம்
16 Jul 2022
ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் ஆரம்பமானது.
விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் 22வது தயாரிப்பாக உருவாக உள்ள படம் இது.
பட பூஜையில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் டி.சிவா, எஸ்.ஆர்.பிரபு, அபினேஷ் இளங்கோவன், சி.வி.குமார், இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
விக்ரமின் 61வது படமாக உருவாகும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை தமிழ் பிரபா எழுத, ஒளிப்பதிவை கிஷோர் குமார் கவனிக்கிறார். செல்வா படத் தொகுப்பை கவனிக்க, சண்டைக் காட்சிகளை அன்பறிவு அமைக்க, நடனங்களை சாண்டி மேற்கொள்கிறார். பாடல்களை கபிலன், அறிவு, உமாதேவி ஆகியோர் எழுதுகிறார்கள்.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
‘அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சர்பட்டா பரம்பரை’ எனத் தொடர்ந்து வெற்றிப் படங்களை அளித்த பா.ரஞ்சித், விக்ரம் கூட்டணி முதல் முறையாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே அதிகமாக உள்ளது.
Tags: pa ranjith, vikram, gv prakashkumar, studio green, vikram 61

